கல்விசார் சுற்றுலா பயணமாக காத்தான்குடி வந்த சம்மாந்துறை அல்-அர்சத் வித்தியாலயக் குழு; நகர முதல்வர் மற்றும் செயலாளர் கௌரவிப்பு.!!!
சம்மாந்துறை அல்-அர்சத் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர், கடந்த (16) கல்விசார் ஒருநாள் சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக காத்தான்குடி நகருக்கு வருகை தந்தனர்.
இதன்போது, காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கி வரும் பூர்வீக நூதனசாலையை பார்வையிட்ட குழுவினருக்கு, நகர முதல்வர் SHM அஸ்பர் நூதனசாலையின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்தார்.
மேலும், நகரசபை செயலாளர் திருமதி ரினோஷா முப்லிஹ் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பாடசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, கல்விசார் சுற்றுலா ஏற்பாட்டிற்கும், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்கும் நன்றியறிதலாக, சம்மாந்துறை அல்-அர்சத் வித்தியாலய நிர்வாகத்தினால் காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர் SHM அஸ்பர் மற்றும் செயலாளர் திருமதி ரினோஷா முப்லிஹ் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.











