அல்-ஹிறா மகா வித்தியாலய 2026 இல்ல விளையாட்டுப் போட்டி: றூபி இல்லம் சம்பியன்.!!!
(எம்.எஸ்.எம். சஜீ)
காத்தான்குடி, அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் 2026ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலையின் முதல்வர் எம்.பீ.எம். றபீக் தலைமையில், பாடசாலையின் ஆற்றங்கரை மைதானத்தில் நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். அப்துல் ஜவாத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
போட்டிகளின் முடிவில், 327 புள்ளிகளைப் பெற்று றூபி இல்லம் முதலாவது இடத்தைப் பெற்று 2026ம் ஆண்டுக்கான சம்பியன் இல்லமாக தெரிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 319 புள்ளிகளைப் பெற்று எமரல்ட் இல்லம் இரண்டாவது இடத்தையும், 304 புள்ளிகளைப் பெற்று சபயர் இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இதன் போது வெற்றி பெற்ற இல்லங்களுக்கும், சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கும் வெற்றிக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.








