உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

அமானிதம் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்; அசித்த பெரேராவை நினைவிற்கொண்டு வந்த நளீம் எம்பி.!!! 

அமானிதம் தவறாத எம்.எஸ்.நளீம் எம் பி யின் இராஜினாமா ஏனையவர்களுக்கு படிப்பினையாக அமையட்டும்.

கடந்த 2024 பொதுத்தேர்தலின் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கபெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்திணை ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம் அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நம்பிக்கை அடிப்படையில் ஏறாவூர் மண்ணையும், மட்டக்களப்பு மாவட்டத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்டது.

பதவியைப்பெறும் போது தலைவருக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து வரலாறு படைத்துள்ளார்.

இவரது இராஜினாமா அசித்த பெரேராவை நினைவு படுத்துகிறது. அதாவது, 1994இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தலைவர் அஸ்ரப் நம்பிக்கை அடிப்படையில் அசித்த பெரேராவுக்கு வழங்கியிருந்தார். இதனால் தலைவரை பலரும் அப்போது விமர்சனம் செய்தனர்.

பின்பு சில வருடங்களில் அந்த பதவியை இராஜினாமா செய்யுமாறு தலைவர் அஸ்ரப் வேண்டிக்கொண்டதும், தாமதியாது உடனடியாக இராஜினாமா செய்து தனது நம்பிக்கையையும், தலைமைத்துவ கட்டுப்பாட்டினையும் வெளிப்படுத்தினார்.

நீண்டகாலங்களுக்கு பின்பு தலைவர் ரவுப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கமைவாக எம்.எஸ்.நளீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலமாக அசித்த பெரேராவை நினைவுபடுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் நம்பிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட காலங்களுக்கென்று வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்து விட்டு ஆட்சியில் இருக்கின்ற தேசிய கட்சிகளுடன் பயணித்து தலைவருக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத்துரோகம் செய்த பட்டியல்கள் மிக நீண்டது மட்டுமல்லாமல் துயரமானது.

முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக தலைவர் அஷ்ரபுடன் நீண்டகாலமாகச் செயற்பட்ட முகம்மது சாலியின் புதல்வர் தான் எம்.எஸ்.நளீம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்காலங்களில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பாக, அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் நளீம் எம்பியைப்போன்று பதவிகளை துச்சமென நினைத்து தலைமைக்கு வழங்குகின்ற வார்த்தைகளில் நம்பிக்கையுடன் செயற்பட்டு தலைமைக்கும், கட்சிக்கும் விசுமாசமாக நடக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

இன்ஷா அல்லாஹ், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினமாச்செய்த சகோதரர் எம்.எஸ்.நளீம் மீண்டும் பாராளமன்றம் உறுப்பினராக வர வேண்டுமென்று பிரார்த்தித்தவனாக, அவரின் இச்செயற்பாட்டினால் எமது கட்சியினால் தொடர்த்தும் அருக்கான உயர்த்த மதிப்பும் கௌரவமும் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஏ.சி.சமால்டீன் (Ex MMC),

உச்ச பீட உறுப்பினர்,

மாவட்ட செயற்குழு செயலாளர்,

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,

அம்பாறை.

Related News

Total Websites Views

Total Views: 115927

Search

விளம்பரங்கள்