உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

அம்பாறை மாவட்டத்தில்: 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்.!!!

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை (04) புதன்கிழமை நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை , கல்முனை ,நற்பிட்டிமுனை, சவளக்கடை , சம்மாந்துறை ,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ,அட்டப்பளம் ,பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் , உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன் பொதுமக்கள் அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் பொலிஸ் நிலையங்கள் வங்கிகள் பிரதேச செயலகங்கள் பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல் தலைமையில் சுதந்திர தின விழாவையொட்டி கோலாகரமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு தன்சல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் அக்கரைப்பற்று பகுதியில் சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871193

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time