மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின்: வருடாந்த பொதுக்கூட்டம் – 2026.!!!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், நாளை மறுதினம் 24.01.2026 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகக் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மீயுயர் குழு தீர்மானித்துள்ளது.
இப் பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன், உறுப்பினர்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேலும், புதிதாக நியமனம் பெற்றுள்ள சமாதான நீதிவான்களை தெளிவூட்டும் நோக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் ஊடாக சிறப்பு செயலமர்வு ஒன்றும் நடைபெற உள்ளது. இதனுடன், 25 பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சுமார் ரூ. 3,500/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இப் பொதுக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்துடன், புதிதாக சங்கத்தில் இணைவதற்கு ஆர்வம் கொண்டவர்கள் இருந்தால், அவர்களையும் குறித்த கூட்டத்திற்கு அழைத்துவரலாம் என அறிவிக்கப்படுகிறது.
மேலும், நீதியின் நிரல் – 2 புத்தகத்திற்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துள்ளவர்கள், குறித்த படிவங்களை கூட்டத்தின் போது புத்தகக் குழுவினரிடமோ அல்லது பொருளாளரிடமோ வழங்கி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தலைவர்
உ. உதயகாந்த் (JP)
📞 077 6027537