உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி அபிவிருத்திக்கு: கந்தசாமி பிரபு எம்.பி அனுமதி.!!!

காத்தான்குடி பிரதேசத்திற்கான இவ்வாண்டின் முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (30) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் ஏற்பாட்டில் இவ் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, 2026ஆம் ஆண்டில் காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் அனுமதியை கோரி, நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் கூட்டத்தில் முன்வைத்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு எம்.பி அவர்களால் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த வேலைத்திட்டங்கள் கட்டம் கட்டமாக காத்தான்குடி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

கடந்த தேர்தல் காலங்களில், “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் காத்தான்குடியில் ஒரு கல்லையும் வைக்க முடியாது” என்ற தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சிக்குப் பின்னர் அவை முற்றாக மறுக்கப்பட்டு, ஊழல் அற்றதும் மக்களுக்கு நேரடியாகப் பயன் தரும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி மக்களின் நீண்ட நாள் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி அரசியலை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700874

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time