உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

உலக சாதனை நிகழ்த்தினார்; ஓவியன் அம்ஜத்.!!!

பொலன்னறுவை, தம்பாளையில் வசிக்கும் அப்துல் ரஹுமான் முஹம்மட் அம்ஜத் ஓவியம் வரைதலில் புதிய “CHOLAN BOOK OF INTERNATIONAL” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இம்மாதம் 23ம் திகதி இடம்பெற்ற சாதனைப்போட்டியில் 15 நிமிடத்திற்குள் மனித முக விம்பத்தை வரைந்து CHOLAN BOOK OF INTERNATIONAL WORLD RECORDS புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

அத்தோடு, அதி வேகமாக செயற்பட்டு குறித்த 15 நிமிடத்தை விட குறைவான நேரத்தில் அதாவது 12 நிமிடத்திற்க்குள் ஓவியம் வரைதலை முடித்து அதற்கான சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டார்.

சிறு வயது முதல் ஓவியம் வரைதலில் ஆர்வமுள்ள அம்ஜத் இடைநிலை கல்வியை தம்பாளை அல் ஹிலால் முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் உயர்தர படிப்பை தம்பாளை அல் றிபாய் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் கற்றவர்.

ஊருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் சாதாரண தரம் முதல் சர்வதேசம் வரையான ஓவிய போட்டிகளில் பங்கு பற்றி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் அம்ஜத்.

இவரது ஓவியக்கலையினை ஊக்கப்படித்தியவர் சித்திரப்பாட ஆசிரியை ஜனாபா நஸிஹா பர்வின் என்பது குறிப்பிடதக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722323

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time