உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்த ‘அசி திசி பியவர’ பயிலரங்கு.!!!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் அறிவு மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘அசி திசி பியவர’ ஊடகவியலாளர் பயிலரங்கு நேற்று (09) காலை 9.00 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சவால்களை எதிர்கொள்ளும் ஊடகவியல் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இப்பயிலரங்கில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எல்.ஐ. பானு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா உள்ளிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

இப்பயிலரங்கில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா, ஊடகவியலாளர்கள் தமது தொழில்சார் பணிகளில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

ஊடகவியலாளர் பணி பல்வேறு சவால்கள் நிறைந்ததுடன், பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கும் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய தொழிலாகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தி, தெளிவான மற்றும் நம்பகமான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உண்மைத்தன்மையை ஆராயாமல் செய்திகளை வெளியிடுவதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சிந்தித்துச் செயற்படுவதே சிறந்த ஊடகவியலாளரின் பண்பாகும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், தனிப்பட்ட பொறுப்பு, செய்திகளை வெளியிடுவதில் உள்ள தொழில்சார் பொறுப்பு மற்றும் ஊடக நெறிமுறைகளைப் பேணுதல் ஆகியவை எல்லாக் காலங்களிலும் ஊடகவியலாளர்களால் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் வலியுறுத்தப்பட்டது.

இப்பயிலரங்கில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1219800

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time