காத்தான்குடி ஷாஹிரா விஷேட பாடசாலையில்: மாணவர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஆடைகள் விநியோகம்.!!!
(எமது செய்தியாளர் )
கடந்த 31 ஆண்டுகளாக காத்தான்குடியில் செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை ஷாஹிறா வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் செயல்படும் சாஹிறா விசேட பாடசாலை மாணவர்களுக்கு புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஆடைகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம் சி ஏ எம் சத்தார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
பரோபகாரிகளின் உதவியுடன் மேற்படி உடுதுணிகள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன
சாகிரா விஷேட பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான மௌலவி அல்ஹாஜ் எஸ் எம் எம் முஸ்தபா, முன்னாள் நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான், சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம் .எஸ்.எமா.நூர்தீன், அல்ஹாஜ் ஏ எம் வதூத், அல்ஹாஜ் எம் எம் ஆதம்பாவா, தொழிலதிபர் எம்.எம்.மக்பூல் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் .










