உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்.!!!

இந்திய அதானி திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு, அதானி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரில், 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்குள், இரண்டு காற்றாலை மின் திட்டங்களும், மின்மாற்றக் குழாய்களையும் கட்டுவது அடங்குகின்றன

முன்னதாக 0.08 அமெரிக்க டொலர் விலை நிர்ணயிக்கப்பட்டதால், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கட்டணங்களைக் குறைக்குமாறும் கேட்டுக் கொண்டது.

எனினும், இதனை ஏற்றுக்கொள்ளாத அதானி நிறுவனம், திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், கடந்த திங்கட்கிழமை அதானி நிறுவனத்திற்கு, எரிசக்தி அமைச்சு, கடிதம் எழுதியுள்ளது.

அதில், இரண்டு வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு கோரியுள்ளதாக, அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722300

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time