நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்: பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!!
(பாறுக் ஷிஹான்)
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பிரதேச செயலக உத்தியோகதர்களுக்கான நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (27) பிரதேச செயலாளார் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் தலைமையில் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இதன் போது நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் திரு. முஹம்மட் ஸாஜீத் ஸமான் மற்றும் ஏ.பி.எம் றிப்சாத் ஆகியோர் கலந்து கொண்டார்.









