உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்: மகப்பேறு மற்றும் மகளிர் நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.!!!

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் தொடர்பான விரிவான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (22) நடைபெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் டாக்டர் எம். ஷப்ராஸ் ஷரீப்தீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கின் போது, மகளிர் நோய்களுக்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறிகள், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதின் அவசியம், தாமதமான சிகிச்சையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, கருப்பை, மார்பக நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் தொடர்பான சிக்கல்கள் மற்றும் கர்ப்பகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பெண்கள் தங்களின் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனித்து, உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஷப்ராஸ் ஷரீப்தீன் வலியுறுத்தினார். மேலும், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை எளிதாகவும் விளைவுகள் குறைவாகவும் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மகப்பேறு கால பராமரிப்பு, உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் பற்றியும் கலந்துகொண்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது. பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டால், குடும்பமும் சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே இந்த கருத்தரங்கின் மையக் கருத்தாக இருந்தது.

பொதுமக்களிடையே மகளிர் நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை நீக்கி, அறிவியல் அடிப்படையிலான மருத்துவ விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலேயே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம், பெண்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டு, ஆரோக்கியமான குடும்பங்கள் மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700854

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time