கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிறது சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதமர் அதிபர் எஸ். பேரின்பராசா தெரிவித்தார்
நேற்றிரவு 8 15 மணிக்கு கொழும்பு நோக்கி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட பாடும்மீன் புகையிரதம் கல்லோயாவில் யானைகளுடன் மோதியதில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன
இதனால் போக்குவரத்து பாதையில் ஏற்பட்டுள்ள சீரின்மை காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன
இன்று அதிகாலை 1.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புளத்திசி கடுகதி புகையிரத சேவை மற்றும் இன்று காலை 6:15 மணிக்கு கொழும்புக்கு செல்லவிருந்தபுகையிரத சேவை உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார் .
திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் மீண்டும் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது