உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசிய மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயது காதலனுக்கு விளக்கமறியல்.!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையைப் பிரசவித்து யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை கைது செய்து நேற்று (28) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்றுவலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 5.00 மணிக்கு மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து யன்னல் வழியாக வீசியநிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் வீசிய குழந்தையை மீட்ட சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனை நேற்று(28) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700707

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time