உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் போதைப் பொருள் வர்த்தகர் கைது.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூராணியா பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் லலித் லீலிரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ரத்னநாயகாவின் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே நூராணியா மையவாடி வீதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகரிடமிருந்து 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ்,10700 ரூபாய் பணம்,5 வங்கிகளின் ஏரியும் அட்டைகள், போதைப் பொருளை தரம் பிரிக்கும் இயந்திரம், கைப்பை உட்பட பல பொருட்கள் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076514

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time