ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்.!!!
(ஜே.கே)
வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலும், முன்னாள் இராஜாங்க செயலாளர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன்,எஸ்.வியாழைந்திரன் ஆகியோர் தலைமையிலும் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபரும்,தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே.முரளீதரனிடம் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.

