மட்டக்களப்பு: பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் – சிறுவர் கடத்தல் அதிகரிப்பு எச்சரிக்கை.!!!
அண்மையில் நாட்டில் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு தலைமை நிலைய பொலிசார் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தலைமை நிலையம் வழங்கிய அவ் அறிவுறுத்தல்களில்:
• பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் உடனே வீடுகளுக்குச் செல்லும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
• வெளிநபர்களிடமிருந்து எதையும் ஏற்க முடியாது; அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் வாங்கக்கூடாது என மாணவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
• தெரியாத நபர்கள் வாகனங்களில் ஏற்றுமாறு கூறினால், எந்த விதமாகவும் வாகனங்களில் ஏறக்கூடாது என கவனத்தரப்பட வேண்டும்.
• மாணவர்கள் மிகுந்த அவதாளத்தோடு நடந்து கொள்ள வேண்டும்; மேற்படி அறிவுறுத்தல்களை பெற்றோருக்கும் தெரிவிக்கவும்.
• சந்தேகத்திற்கிடமான நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ள வேண்டும்.
அவசர தொடர்பு எண்கள்:
119, 065 2224356, 065 2224422
இப்பணிகள் மூலம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சந்தேகமுள்ள நபர்களை அடையாளம் காணவும் மட்டக்களப்பு பொலிஸார் பாடசாலைகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
