உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ்: நிந்தவூரில் ரூ. 1.7 மில்லியன் செலவில் – கடற்கரை பூங்கா திறந்து வைப்பு.!!!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு  அமைவாக, நிந்தவூரில் 1.7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காவினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான  அபூபக்கர் ஆதம்பாவா திறந்து வைத்து, மக்கள் பாவனைக்காக பிரதேச சபை செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக நேற்று  (11)  புதன்கிழமை மாலை கையளித்தார்.

இந்நிகழ்வில், நி்ந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம். சம்சுன் அலி, ஏ. இப்திகார், பிரதேச சபையின் செயலாளர் சிஹாபுதீன் மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள்,
பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700896

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time