உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

கடலில் கவிழ்ந்த படகு; 25 இந்தோனேசியர்களுக்கு மனிதநேய உதவியளித்த இலங்கை கடற்படை.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் மீட்கப்பட்டு, இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு, கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி கடலில் கவிழ்ந்ததில் அதில் இருந்த இந்தோனேசிய மீனவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

இதன்போது, அவ்வழியாகப் பயணித்த MV MOONSTONE கப்பலினால் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசியப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு MV MOONSTONE கப்பலினால் கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடற்படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக இரண்டு கடற்படைப் படகுகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கமைய, MV MOONSTONE கப்பல் மூலம் அழைத்து வரப்பட்ட 25 இந்தோனேசியப் பிரஜைகளும் கடற்படையினரின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கரைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை இலங்கை இந்தோனேசியத் தூதரகத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185253

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time