உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் கார் விபத்து: ஈச்சிலம்பற்று பகுதியில் பரபரப்பு.!!!

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் இன்று (08) இடம்பெற்ற கார் விபத்தினால் ஈச்சிலம்பற்று பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, ஈச்சிலம்பற்று பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த றபியுதீன் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு காயமடைந்த அவர் தெய்வாதீனமாக உயிர் ஆபத்தின்றி மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக வாகனம் செலுத்தியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 930378

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time