ஹிஸ்புல்லாஹ் எம்பி தாக்கல் செய்த வழக்குகள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி.!!!
(பாறூக் சிஹான்)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று(27) நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டன.
முகநூல் சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி வழக்குககள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
இவ்வழக்குகளில் எதிராளிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகள், இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், சப்ரின், எம்.ஐ. இயாஸ்டீன், ஹனிபா பசில், ஜெசிம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்