மாறும் காலநிலை, குறையும் மீன்பிடி; வாழ்வாதாரம் இழக்கும் மட்டக்களப்பு மீனவர்கள்.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ்-
காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி மற்றும் ஒந்தாச்சிமடம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தினால் கடல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மீன்பிடித் தொழிலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் அலைகளின் தீவிரம், கடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் சீரற்ற காலநிலை போன்ற காரணிகளால் மீன்பிடிக்குச் செல்லும் நாட்கள் குறைவடைந்துள்ளதுடன், மீன்பிடி வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மீன்பிடித் தொழிலை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை முறையாக ஆய்வு செய்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





