ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் களைகட்டிய சிறுவர் சந்தை; மாணவர்களை பாராட்டிய ஹிஸ்புல்லாஹ்.!!!
காத்தான்குடி மட்/மம ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் “சிறுவர் சந்தை” (Children’s Market) நிகழ்வு, பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஏ.எம். றிஸ்வி அவர்களின் தலைமையில் இன்று (02) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு சிறுவர் சந்தை நிகழ்வை சிறப்பித்தார்.
இதன்போது மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்களைப் பாராட்டிய அவர், அவர்களை மேலும் ஊக்குவித்தார்.
மாணவர்களின் செயற்பாட்டு திறன், வியாபாரம் தொடர்பான அடிப்படைப் புரிதல் மற்றும் சமூகத் தொடர்பாடல் திறன்களை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






