உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்வில் காத்தான்குடிக்கு முக்கிய பரிசு – கடற்கரை துப்புரவு இயந்திரம் கையளிப்பு.!!!

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபைக்கு கடற்கரை துப்புரவு செய்யும் நவீன Beachtech இயந்திரம் வழங்கப்பட்டது.

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையும், செப்டெம்பர் 19 முதல் 25 வரை நடைபெறும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தையும் முன்னிட்டு, தேசிய நிகழ்வு இன்று (19) காலை பாணந்துறை பீச் பார்க்கில் நடைபெற்றது.

“கிளீன் ஸ்ரீலங்கா” செயலகம், சுற்றாடல் அமைச்சு மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பாணந்துறை நகர சபை, திருகோணமலை மாநகர சபை, காத்தான்குடி நகர சபை, பொத்துவில் பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கடற்கரை துப்புரவு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபைக்கான இயந்திரம், நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி, “கிளீன் ஸ்ரீலங்கா” செயலகத் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் சுகீஷ்வர, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் கலாநிதி சமந்த குணசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு, காத்தான்குடி நகர சபை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்வின் நிறைவில் பாணந்துறை கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முப்படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சுற்றுலாத்தளமாக வளர்ந்து வரும் காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் நகர சபையின் திட்டமுன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இந்த இயந்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166804

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time