உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கிழக்கு பாதுகாப்புப் படைகளின் தளபதி விஜயம்.!!!

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் M.S.M. ஜபீர் அவர்களின் அழைப்பின் பேரில், கிழக்கு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் W.M.N.K. திலுப பண்டார திங்கட்கிழமை (05) காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு விசேட விஜயம் மேற்கொண்டார்.

இவ்விசேட விஜயத்தின்போது, 24வது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமல் விக்ரமசேகர அவர்களும், வணக்கத்திற்குரிய கத்தனொருவே சிறிதம்ம தேரர் அவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை பணிக்குழுவினர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அபிவிருத்திப் பணிகள் மற்றும் எதிர்கால முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கும், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் இவ்வாறான உயர்மட்ட சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214331

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time