மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பரபரப்பு: பாரம் தாங்காமல் உடைந்த டிப்பர்; குளிர்சாதனப் பெட்டிகள் சேதம்.!!!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்டம் உடைந்ததில், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்துள்ளன.
இன்று காலை (11) களுவாஞ்சிகுடி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, டிப்பர் வாகனத்தின் அடிப்பகுதி உடைந்ததைத் தொடர்ந்து, அதில் ஏற்றிச் செல்லப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் உடைந்து விழுந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்டப் பகுதி மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தமையே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.


