உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

3 பொலிஸ் அதிகாரிகளுக்கு; 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது – மேல் நீதிமன்றம்.!!!

பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை  (12) , ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2004இல், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிசார், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையில், சட்டவிரோத மதுபானம் தேடி ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர்.

இதன்போது ஹோட்டல் முகாமையாளருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொலிசார் அவரைத் தாக்கியதில் முகாமையாளர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நான்கு பொலிசாரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, பொலிஸ் பரிசோதகர் வசந்த நோயால் உயிரிழந்தார்.

எஞ்சிய மூன்று பொலிசாருக்கு 2025 ஜனவரியில் மீண்டும் பணி வழங்கப்பட்டு, அவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும், மற்ற இருவர் வேறு மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டனர்.

2025 செப்டம்பர் 12 அன்று, மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று பொலிசாரும் ஆஜராகினர்.

சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்புக்குப் பின், மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810159

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time