உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக அதிரடி – 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.!!!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 8 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையிலும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாகவும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரின் நேரடி வழிகாட்டலில், பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1168446

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time