காத்தான்குடியில் களைகட்டிய சைக்கிள் திருவிழா – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!!!
“ஆரோக்கியமான நாளைக்காக மிதிவண்டி” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடி சைக்கிள் திருவிழா 2026 இன்று (27) காத்தான்குடி கடற்கரை சாலையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், விளையாட்டு உணர்வை வளர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
RiSE Sri Lanka (Research Institute for Social Empowerment) மற்றும் YESDO (Youth Empowering & Social Development Organisation) ஆகிய அமைப்புகளின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சைக்கிள் திருவிழாவின் பிரதான கருப்பொருளாக “Pedal for a Healthier Tomorrow – ஆரோக்கியமான நாளைக்காக மிதிவண்டி ஓட்டுவோம்” அமைந்திருந்தது.
“உணர்வுபூர்வமாக இணைவோம், சைக்கிளோடு….” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக ஒற்றுமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
நான்கு வயதுப் பிரிவுகளாக நடைபெற்ற இச்சைக்கிள் திருவிழாவில் 300-க்கும் அதிகமான குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். அவருடன் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
ஆரோக்கியமான சமூகத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தி நடைபெற்ற இச்சைக்கிள் திருவிழா, காத்தான்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.





