மக்களோடு தினசரி சந்திப்பு; நம்பிக்கையுடன் கடமையாற்றும் பிரதேச சபை உறுப்பினர் – ஹாதிக் இப்றாஹிம்.!!!
(முபாறக் அஸ்லம்)
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மழைக்காலங்களில் நீர் தடையின்றி வடிந்து ஓடுவதற்காக வடிகான்களில் படிந்து கிடந்த மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, மழைநீரால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் விரைவாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்கள் தனது 6-ஆவது வட்டாரத்தில் தொடர்ச்சியாக மக்களுக்காக தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருவதோடு, மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் தனது வட்டாரத்திற்கு விஜயம் செய்து, மக்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றார்.
அதுமட்டுமன்றி, தனது வட்டாரம் என்ற எல்லைக்குள் மாத்திரம் சேவையைச் சுருக்காமல், முழு சம்மாந்துறை பிரதேச மக்களுக்கும் தன்னால் முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் பல்வேறு சமூக மற்றும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றார். தேவையுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை தயக்கமின்றி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தன்னை வாக்களித்து தெரிவுசெய்த மக்களிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும், பொது பொறுப்புணர்வையும் அடிப்படையாக கொண்டு, அமானிதத்துடனும் நேர்மையுடனும் தனது கடமைகளை ஆற்றிவரும் கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் சேவைகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது





