உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடி சாஹிரா விஷேட பாடசாலைக்கு வழிகாட்டும் பெயர்ப் பலகைகள் — ‘ஹிஸ்புல்லாஹ் போரம்’ அன்பளிப்பு.!!!

காத்தான்குடி பிரதேசத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதலை இலகுவாக்கும் நோக்கிலும், காத்தான்குடி சாஹிரா விஷேட பாடசாலையை எளிதில் சென்றடைய உதவும் வகையிலும், பாடசாலைக்குச் செல்லும் பாதை மற்றும் தூரத்தை தெளிவாகக் குறிக்கும் பெயர்ப் பலகைகளை அமைத்துத் தருமாறு பாடசாலையின் அதிபர் மற்றும் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (04) டீன் வீதி மற்றும் அலியார் சந்தி ஆகிய இடங்களில் ‘ஹிஸ்புல்லாஹ் மன்றம்’ சார்பில் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டு, அவை அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், பாடசாலை நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் காத்தான்குடி சாஹிரா விஷேட பாடசாலையின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.சி.எம்.ஏ. சத்தார், பாடசாலையின் அதிபர், ஹிஸ்புல்லாஹ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

— ஊடகப்பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810760

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time