உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 15, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

காத்தான்குடியில் அனர்த்த முன்னாயத்தக் கூட்டம்; பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.!!!

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வு இன்று (14) புதன்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், அனர்த்த முகாமைத்துவம், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சியாட், பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும், கடந்த டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்களுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகள், இழப்பீடுகள் தொடர்பில் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம். என். நஜ்மி விளக்கமளித்தார்.

இச்செயலமர்வில், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஜரூப், நகர சபைச் செயலாளர், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுக்கவும், அவசர நிலைமைகளின்போது ஒருங்கிணைந்து செயற்படவும் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1233410

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time