உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து வந்த போதைப்பொருட்கள்; கட்டுநாயக்கவில் இருவர் கைது.!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.51.37 மில்லியன் (ரூ.5.13 கோடி) பெறுமதியான குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்திலிருந்து Thai Airways TG 307 விமானம் மூலம் இலங்கை வந்த இருவரின் பயணப் பொதிகளை விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 2.224 கிலோகிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் ரூ.22.24 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பயணப் பொதிக்குள் 8 பிளாஸ்டிக் போத்தல்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, 23 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 2.272 கிலோகிராம் குஷ் கஞ்சா மற்றும் 641 கிராம் ஹஷிஷ் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் ரூ.29.13 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இருவரிடமிருந்தும் மொத்தமாக 4.496 கிலோகிராம் குஷ் கஞ்சா மற்றும் 641 கிராம் ஹஷிஷ் என மொத்தம் 5.137 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215586

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time