உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மலேசியாவிலிருந்து உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட: 536 மில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் சுங்கத்தால் பறிமுதல்.!!!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா (53.6 கோடி ரூபா) பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ் (இதன் சந்தை மதிப்பு சுமார் 510 மில்லியன் ரூபா), ஒரு கிலோகிராம் ஐஸ் (இதன் சந்தை மதிப்பு சுமார் 25 மில்லியன் ரூபா) மீட்கப்பட்டுள்ளன.

இவை மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ‘அன்பளிப்பு பொதிகளாக’ அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு 10, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இலங்கை பிரஜைகளின் முகவரிகளுக்கே இந்தப் பொதிகள் வந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் அது தொடர்பான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனையில், இவை மிகவும் சூட்சுமமான முறையில் உணவுப் பொதிகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933647

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time