உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம் – நிர்வாக மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி.!!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (13) கிழக்கு மாகாணம் முழுவதும் அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் மீது நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி புதிய பணிப்பாளரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள 2 பொது வைத்தியசாலைகள், 1 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மையங்களில் வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளையும் சேர்ந்த மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருவதாக, அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066396

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time