பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்: ஹெரோயினுடன் கைது.!!!
பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பகஸ்துவ பிரதேசத்தில், அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.