உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடியில் தீ விபத்து: இரு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதம் – அரைக் கோடிக்கு மேல் நஷ்டம்.!!!

–எம்.ரி.எம்.யூனுஸ்–

காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள வெல்டிங் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இரு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று (25) வியாழக்கிழமை காலை 11 மணியலவில் வெல்டிங் நிலையத்தில் திடீரெனப் பற்றிய தீ, சில நிமிடங்களுக்குள் முழுக் கடைக்கும் பரவி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருந்தக நிலையத்திற்கும் தீ பரவி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்குள் இரு கடைகளும் பெரும் அளவில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் அரைக் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066887

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time