உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கிழக்குக் கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவர்; கரைக்கு அழைத்து வந்த கடற்படை.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

திருகோணமலைக்கு அப்பால் கிழக்குக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகைச் சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் அவசரமாகக் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (01) மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட ‘வேணுஷ புத்தா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 11 கடல் மைல் தொலைவில் கிழக்குக் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது, படகில் இருந்த மீனவர் ஒருவர் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த மீனவரை உடனடியாகக் கரைக்கு அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையகத்துடன் இணைக்கப்பட்ட P460 அதிவேகத் தாக்குதல் கப்பல் அவசர நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடற்படையினர் குறித்த மீனவரை தங்களது கப்பலில் ஏற்றியதுடன், அவருக்கு தேவையான அடிப்படை முதலுதவியையும் வழங்கினர். பின்னர் அவரை விரைவாக திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையின் கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் கடலில் இடர்ப்படும் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் சமூகத்தினருக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214779

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time