உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலாப நோக்கமின்றி மக்கள் சேவைக்காக: காத்தான்குடியில் அல்ட்ரா வைத்தியசாலை திறப்பு.!!!

முதியோர் இல்ல வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘அல்ட்ரா ஹொஸ்பிடல்’ (Ultra Hospital Pvt Ltd) தனியார் வைத்தியசாலையின் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை நடைபெற்றது.

அல்ட்ரா குரூப் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஐ.எல்.எம். அக்பர் மற்றும் அதன் தலைவர் ஏ.எம்.எம். உனைஸ் ஆகியோரின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ. லதாஹரன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள், வைத்தியர்கள், சமயத் தலைவர்கள், உலமாக்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து மக்களுக்குமான சேவை: அல்ட்ரா ஹொஸ்பிடல் எந்தவொரு இலாப நோக்கமும் இன்றி, சமூக நலனை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எவருடனும் போட்டியிடும் நோக்கில் வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவையை வழங்குவதே பிரதான இலக்காகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அல்ட்ரா நிறுவனத்தின் சமூகப் பணிகளின் தொடர்ச்சியாகவே இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அந்நிறுவனத்தின் சமூகப் பணிகளாக வீடற்ற குடும்பங்களுக்கு வருடாந்தம் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்தல், புனித ரமழான் காலத்தில் சஹர் உணவு வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அல்ட்ரா ஹொஸ்பிடல் காத்தான்குடி மக்களுக்கும் பிராந்திய மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மக்கள் நலனை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time