உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கல்வியை உயர்த்துவோம் கருப்பொருளில்; மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!

– எம். ரி. எம். யூனுஸ் –

“கல்வியை உயர்த்துவோம்” எனும் கருப்பொருளின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு – 2026, இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி கல்வி கோட்டத்திற்குட்பட்ட 21 பாடசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு இந்நிகழ்வின் போது இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நகர சபை உறுப்பினர் எம். எப். எம். கலீல் பாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம். ஆர். எப். ரிப்கா ஷபீன், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க அழககோன், மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவி பணிப்பாளர் எம். எம். எம். சிந்தா முபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, கலந்துகொண்ட விசேட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு. காத்தான்குடி ஸாஹிரா விஷேட பாடசாலை, சிறுவர் அபிவிருத்தி நிலையம், முஸ்லிம் முதியோர் இல்லம் ஆகிய நிறுவனங்களுக்கு தேவையான கற்றல் மற்றும் பயன்பாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700801

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time