உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை: 6,400 லீட்டர் 92 ரக பெட்ரோல் பறிமுதல்.!!!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பேருவளை பிரதேசத்திலுள்ள பிரதான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை திடீர் முற்றுகைக்கு உள்ளாக்கியுள்ளது.

இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், 92 ரக பெட்ரோல் இல்லை எனத் தெரிவித்து, அதற்குப் பதிலாக ‘யூரோ 3’ (Euro 3) ரக பெட்ரோலை விற்பனை செய்யும் நடைமுறை நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

அத்தகவல்களின் அடிப்படையில் செயற்பட்ட களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், நேற்று (14) இரவு பேருவளை பிரதேசத்தில் உள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

முற்றுகையின் போது, நுகர்வோருக்கு வழங்கப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லீட்டர் 92 ரக பெட்ரோல் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இரவு நேரங்களில் 92 ரக பெட்ரோல் இல்லை எனக் கூறி, ‘யூரோ 3’ ரக பெட்ரோலை விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளே தங்களுக்கு அறிவுறுத்தியதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் விசாரணையின் போது வெளிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கண்டுபிடிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700839

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time