உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை; மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு.!!!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பிக்கும் முறை:

* பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk க்கு பிரவேசித்து, Our Services பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கலாம்.

* பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி (DOE) மூலம் “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

* https://onlineexams.gov.lk/eic இணையதளத்தை அணுகுவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவி பெறலாம்:

இணைய வழி கிளை : 0113661122, 0113671568

பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 0112785231, 0112785681

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720141

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time