உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம்: காத்தான்குடியில் ஐந்து புதிய வீடுகள் கையளிப்பு.!!!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் பயனாளிகளின் பங்களிப்புடனும் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து வீடுகள் இன்று (15) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு, வீடொன்றைத் திறந்து வைத்து அதனைப் பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட தலா 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடனும், பயனாளிகளின் பங்களிப்புடனும் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வீடற்ற மக்களுக்கு நிரந்தரமான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், உதவிப் பிரதேச செயலாளர் சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கன்சுல் சிஹானா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகக் கணக்காளர் சாகிர் ஹுசைன், தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1234337

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time