உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம்: கிழக்கு மாகாணத்தில் வைத்திய சேவைகள் ஸ்தம்பிப்பு – மட்டக்களப்பு மாவட்டத்தில் நோயாளர்கள் பெரும் அவதி.!!!

(ஜே.கே)

அரச வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது

குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சனி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரிய குறித்த வேலை நிறுத்தம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215053

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time