உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்/மம/மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் – தரம் 1 வித்தியாரம்ப நிகழ்வு.!!!

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 1 வகுப்புகள் இன்று (29.01.2026) உத்தியோகபூர்வமாக மட்/மம/மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வித்தியாரம்ப நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பல அருமையான நிகழ்வுகள் இடம்பெற்றன. தரம் 2 மாணவர்களால் தரம் 1 மாணவர்களுக்கு பூக்கள் வழங்கப்பட்டு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் A.L.M. றிபாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் ஓய்வு நிலை அதிபர் கலாநிதி M.S.S. அஹமட் (PhD) ஆகியோர் உரையாற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் EPSI ஒருங்கிணைப்பாளர் M.R. பாயிஸ் (ADE – Science), CGO M.R. றிஸ்வி, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி ஆயிஷா உம்மா, பிரதேச கிராம அலுவலர் M.R. லெவகாந்தன், பொதுச் சுகாதார பரிசோதகர் M.R. கஜன், அந்நாஸர் வித்தியாலய அதிபர் M.R. அப்துர் ரஹ்மான் (SLPS), பாடசாலை SDEC செயலாளர் M.R. மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.

வித்தியாரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக, மஞ்சந்தொடுவாய் ஹிழுர் ஜும்மா பள்ளிவாயல் உதவி பேஸ் இமாம் மௌலவி அப்துர் ரஹ்மான் அவர்களால் புதிய மாணவர்களுக்கு துஆ ஓதப்பட்டதுடன், வர்ண அரிசிகளில் அகர எழுத்துக்கள் அதிதிகளால் எழுதுவிக்கப்பட்டது.

மேலும், நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைவாக தரம் 1 வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டதுடன், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் புதிய நவீன ஸ்மார்ட் TV ஒன்று பொருத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளை விண்மீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் M.R. ருசன் அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700870

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time