வீடு மீது கைக்குண்டு வீச்சு; இரு சிறுவர்கள் பலி, தந்தை காயம்.!!!
தெஹிவளை, கௌடான, சிறிசங்கபோ வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த வீட்டின் மீது கைக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், தாக்குதலுக்கான காரணம் மற்றும் அதனை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.