உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு: கற்கை நெறி தேர்வு மற்றும் விண்ணப்ப வழிகாட்டல் நிகழ்வு.!!!

-நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மயோன் சமூக சேவை அமைப்பின் அனுசரனையில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் வழிகாட்டல் நிகழ்வு மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம வளவாளராக ஆசிரியர் சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை தொடர்பில் விஷேட உரையாற்றினார்.  மேலும் மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக நிகழ்வின் கெளரவ அதிதியாக திடீர் மரண விசாரணை அதிகாரி, மொழிபெயர்ப்பாளர் ஏ.எச்.அல் ஜவாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு இளைஞர் சேவை அதிகாரி அன்வர் அப்துல் கபூர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

சுமார் 120 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806254

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time