உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கடின பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது; வயம்ப டஸ்கர்ஸ் கழகம்.!!!

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

நீர்கொழும்பு மூவர்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகள் கொண்ட கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் வயம்ப டஸ்கர்ஸ் கிரிக்கெட் கழகம் செம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

12 அணிகள் பங்கு பற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டி நீர்கொழும்பு திம்பிரிகஸ்கொட்டுவவில் அமைந்துள்ள மாரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டிக்கு குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த வயம்ப டஸ்கர்ஸ் அணியும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நேட்டிவ் கிரிக்கெட் கழகமும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வயம்ப டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளுக்கு முகம் கொடுத்து 08 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றனர்.

இதில் அணித்தலைவர் சரோத் 20 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜஃப்ரான் 20 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேட்டிவ் கிரிக்கெட் கழகம் 100 பந்துகளை முகம் கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.

இதில் வயம்ப டஸ்கர்ஸ் அணி சார்பாக முஸர்ரஃப் 03 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். இத்தொடரின் முடிவில் சாம்பியன் பட்டத்தை சுவிகரித்துக் கொண்ட வயம்ப டஸ்கர்ஸ் கழகத்திற்கு 250,000 ரூபாய் பணப்பரிசும் பெறுமதியான வெற்றி கேடயமும் வழங்கப்பட்டது. இப்போட்டியின் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரராக முஸர்ரஃப் தெரிவு செய்யப்பட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700571

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time