உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான அடைமழை: பல வீதிகள் வெள்ளத்தில் – 24 மணித்தியாலத்தில்128.9 மில்லி மீற்றர் மழை.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதுடன் இன்று காலை முதல் கடல் பிரதேசங்களில் கடுமையான காற்றும் வீசிவருகின்றது

இன்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மாவட்டத்தில் 128.9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடுமையான மழை காரணமாக காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சி முனை, நாவலடி, கல்லடி உட்பட பல பிரதேசங்களில் அன்றாட அலுவல்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் பிரதேசங்களில் மிகவும் மயான அமைதியான நிலையும் காணப்படுவதுடன் வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல சிறுவர் பூங்காக்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல விளையாட்டு மைதானங்களும் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700912

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time