17 வயது மாணவி ஹெரோயினுடன் கைது.!!!
அம்பலாங்கொடை, குருந்துவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவியொருவர் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த மாணவி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சிறுமி, இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகி வருகின்ற 17 வயதுடைய அம்பலாங்கொடை அரச பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவியாவார்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சகோதரர் மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களைச் சந்திக்கவும் பணம் பெறவும் சிறுமியைப் பயன்படுத்தியமை தெரிய வந்துள்ளது.
✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்!
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5